தமிழ்நாடு (Tamil Nadu)
null

111 சதவீதம் அதிகம்.. கொட்டித் தீர்க்கப்போகும் வடகிழக்கு பருவமழை - வானிலை ஆய்வு மையம்

Published On 2024-10-01 10:50 GMT   |   Update On 2024-10-01 12:43 GMT
  • தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்தது.
  • ஜூன் 1 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் 389.2 மி மீ மழை பெய்துள்ளது.

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட இந்தாண்டு 18 சதவீதம் கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை 4 மாதங்கள் வரை பெய்யும். தென்மேற்கு பருவ மழையின் மூலம் தமிழகத்தில் கன்னியாகுமரி, தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்கள் மழை பொழிவை பெறும்.

தமிழ்நாட்டில் தீவிரமாக பெய்து வந்த தென்மேற்கு பருவமழை செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்தது.

தென்மேற்கு பருவமழையால் குறைவான மழைபொழிவை பெரும் தமிழ்நாடு இம்முறை அதிகளவிலான மழையை பெற்றுள்ளது. ஜூன் 1 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் 389.2 மி மீ மழை பெய்துள்ளது.

இந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டில் பெய்யும் சராசரி மழை அளவு 328.5 மி மீ ஆகும். ஆகவே தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட 18% அதிகமாக பெய்துள்ளது.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக பெய்யும். கேரளா, தமிழகம், தெற்கு கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட குறைவாக பதிவாக வாய்ப்பு உள்ளது.

அக்டோபர் 3 ஆவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது. இதோடு இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட 111 சதவீதம் அதிகமாக பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

Tags:    

Similar News