தமிழ்நாடு

மாயாற்றின் குறுக்கே கரை புரண்டு ஓடும் வெள்ளத்தை படத்தில் காணலாம்.

மாயாற்றில் வெள்ளப்பெருக்கால் பரிசல் இயக்க தடை: தெங்குமரஹாடா வன கிராமத்திற்கு போக்குவரத்து துண்டிப்பு

Published On 2023-07-27 04:10 GMT   |   Update On 2023-07-27 04:10 GMT
  • பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 7,200 கன அடியாக அதிகரித்துள்ளதால் மாயாற்றில் மழை நீர் செந்நிறத்தில் சீறி பாய்கிறது.
  • மக்கள் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் அவதி அடைந்துள்ளனர்.

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி தெங்குமரஹாடா, அல்லிமாயாறு, கல்லாம் பாளையம் ஆகிய வன கிராமங்கள் உள்ளன. இதில் 1500 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள இக்கிராம மக்கள் வனப்பகுதி வழியாக ஓடும் மாயாற்றை பரிசலில் கடந்து சென்ற பஸ்ஸில் ஏறி பவானிசாகர் சத்தியமங்கலம் மேட்டுப்பாளையம் கோத்தகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இதேபோல் இப்பகுதியில் படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களும் பரிசலில் சென்று தான் படித்து வருகின்றனர்.

மாயாற்றின் குறுக்கே பாலம் இல்லாததால் தெங்குமரஹாடா, அல்லிமாயார், கல்லம்பாளையம், சித்திரம் பட்டி கிராம மக்கள் பரிசலில் ஆற்றை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நீலகிரி மாவட்டம் மலைப்பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தற்போது பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 7,200 கன அடியாக அதிகரித்துள்ளதால் மாயாற்றில் மழை நீர் செந்நிறத்தில் சீறி பாய்கிறது. இதன் காரணமாக வன கிராம மக்கள் ஆற்றலை கடந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் வன கிராம மக்கள் ஆபத்தான முறையில் பரிசலில் ஆற்றை கடந்து சென்று வந்தனர். மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் மாயாற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

மாயாற்றில் தொடர்ந்து வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் தெங்குமரஹாடா , கல்லம்பாளையம், அல்லிமாயாறு சித்திரப்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு தற்போது போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மாயாற்றில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் டெம்போ, லாரி உள்ளிட்ட வாகனங்கள் ஆற்றை கடந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வாகனங்கள் மற்றும் பரிசல் மூலம் ஆற்றைக் கடக்க வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வெள்ளப்பெருக்கு காரணமாக கல்லாம்பாளையம், அல்லி மாயாறு, சித்திரப்பட்டி, டெங்குமரஹாடா, ஆகிய கிராம மக்கள் பரிசலில் ஆற்றை கடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் வேலைக்காக வெளியூர் செல்லும் மக்கள் வியாபாரத்திற்காக வெளியிடங்களுக்கு செல்லும் மக்கள் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் அவதி அடைந்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது,

நாங்கள் பல வருடங்களாக இந்த பகுதிகளில் வாழ்ந்து வருகிறோம். வியாபாரத்திற்காக வேலைக்காக படிப்புக்காக இந்த பகுதி மக்கள் குழந்தைகள் செல்வதற்கு மாயாற்றை கடந்து தான் செல்ல வேண்டும்.

மழை இல்லாத காலங்களில் ஒரு பிரச்சனையும் இல்லை. மழைக்காலங்களில் திடீரென மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விடுகிறது. அந்த சமயம் பரிசலில் சென்றாலும் உயிருக்கு உத்திரவாதம் இல்லை. இருந்தாலும் வேறு வழியில்லாமல் ஆபத்தான முறையில் மாயற்றைக் கடந்து செல்கிறோம்.

எனவே மாயாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும், அவர் அளித்த புகாரின் பேரில் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் மணிக்குமார் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News