தமிழ்நாடு

குடிநீர் வடிகால் வாரிய பணி: வேப்பேரி பகுதியில் போக்குவரத்து மாற்றம்

Published On 2024-04-11 04:26 GMT   |   Update On 2024-04-11 04:26 GMT
  • ஹண்டர்ஸ் சாலையில் டவுட்டன் சந்திப்பில் இருந்து வரும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் இலகுரக மோட்டார் வாகனங்கள் வலதுபுறம் திரும்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • ஹண்டர்ஸ் சாலையில், டவுட்டன் சந்திப்பில் இருந்து வரும் மாநகர பஸ்கள் மற்றும் வணிக வாகனங்கள் வலதுபுறம் திரும்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

சென்னை வேப்பேரி ஈ.வி.கே. சம்பத் சாலையில் உள்ள நாராயண குரு சாலை சந்திப்பு முதல் ஜெர்மியா சாலை சந்திப்பு வரையில் சென்னை குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் சாக்கடை வடிகால் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் நேற்று முதல் வருகிற 13-ந் தேதி வரை வேப்பேரி, புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

* ஈ.வி.கே. சம்பத் சாலையில் உள்ள ஹண்டர்ஸ் சாலை - நாராயணகுரு சாலை சந்திப்பில் இருந்து ஈ.வி.கே. சம்பத் சாலை - ஜெர்மியா சாலை சந்திப்பு வரையிலும் தற்காலிகமாக மூடப்பட உள்ளது.

* ஹண்டர்ஸ் சாலையில் டவுட்டன் சந்திப்பில் இருந்து வரும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் இலகுரக மோட்டார் வாகனங்கள் வலதுபுறம் திரும்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, அவர்கள் ஜெனரல் காலின்ஸ் சாலை, மெடெக்ஸ் சாலை மற்றும் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக தங்கள் இலக்கை அடையலாம்.

* ஹண்டர்ஸ் சாலையில், டவுட்டன் சந்திப்பில் இருந்து வரும் மாநகர பஸ்கள் மற்றும் வணிக வாகனங்கள் வலதுபுறம் திரும்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. மாறாக, சூளை நெடுஞ்சாலை, ராஜா முத்தையா சாலை மற்றும் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாகச் சென்று அவர்கள் இலக்கை அடையலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News