தமிழ்நாடு

2 பஸ்கள் மோதி விபத்து: மேலும் ஒரு முதியவர் பலி- சாவு எண்ணிக்கை 6 ஆக உயர்வு

Published On 2023-06-20 08:10 GMT   |   Update On 2023-06-20 08:10 GMT
  • கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்த பஸ்சின் முன்பக்க டயர் வெடித்தது.
  • 91 பேர் லேசான மற்றும் பலத்த காயங்களுடன் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

கடலூர்:

பண்ருட்டியில் இருந்து புறப்பட்ட தனியார் பஸ் கடலூர் நோக்கி நேற்று காலை 9 மணியளவில் வந்து கொண்டிருந்தது. இதேபோல கடலூரில் இருந்து மற்றொரு தனியார் பஸ் பண்ருட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. காலை நேரம் என்பதால் வேலை செல்பவர்கள், பள்ளிக்கு செல்பவர்கள் என ஏராளமான பயணிகள் பஸ்களில் சென்றனர்.

இதில் கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்த பஸ்சின் முன்பக்க டயர் வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், எதிரில் கடலூரில் இருந்து பண்ருட்டி நோக்கி வந்த பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் 2 பஸ்களில் சென்ற 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மற்றொருவர் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பலியானார். இதனால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. மேலும், 91 பேர் லேசான மற்றும் பலத்த காயங்களுடன் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கிருந்து மேல்சிக்சைக்காக புதுவை ஜிப்மர் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் விபத்தில் படுகாயமடைந்து புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கடலூர் ஆலப்பாக்கத்தை சேர்ந்த துரை (68) சிகிச்சை பலனின்றி இன்று நண்பகலில் இறந்தார். மேலும், பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

Tags:    

Similar News