தமிழ்நாடு

மத்திய மந்திரி முருகன்

காசி தமிழ் சங்கமத்தில் தமிழ் இலக்கியங்கள் காட்சிபடுத்தப் படுகின்றன- மத்திய மந்திரி முருகன் பேட்டி

Published On 2022-11-22 15:00 GMT   |   Update On 2022-11-22 15:01 GMT
  • உலகின் முதன்மை மொழியான தமிழுக்கு பெருமை சேர்க்கிறார் பிரதமர்.
  • பிரதமர் தமது தொகுதியில் காசி தமிழ் சங்கமம் நடத்தி இருப்பது கூடுதல் சிறப்பு.

சென்னையை அடுத்த ஆவடியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் கூறியதாவது:

காசிக்கும், தமிழகத்திற்கும் ஆயிரமாயிரம் ஆண்டு கால பிணைப்பு உள்ளது. காசி - ராமேஸ்வரம், காசி - சிவகாசி, காசி – சிவகங்கை என அனைத்திற்கும் இடையே பந்தம் உள்ளது. காசி – ராமேஸ்வரம் யாத்திரை இன்னும் வழக்கத்தில் உள்ளது. 

காசி – தமிழ்நாடு இடையேயான கலாச்சார, பண்பாட்டு தொடர்பை மேலும் வலுப்படுத்தும் விதமாக, தனது சொந்த தொகுதியான வாரணாசியில் இந்த காசி தமிழ் சங்கமத்தை பிரதமர் ஏற்பாடு செய்துள்ளார்.

இந்த சங்கமத்தில் தமிழ்நாட்டின் பண்பாடு, பழக்கவழக்கங்கள், வீர விளையாட்டுக்கள், தமிழகத்தின் பாரம்பரிய பொருட்கள், தமிழ் இலக்கியங்கள் ஆகியவை ஒரு மாத காலத்திற்கு காட்சிப்படுத்தப்பட உள்ளன. மேலும் 13 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட

திருக்குறள் புத்தகத்தை, காசி தமிழ் சங்கமம் தொடக்க நிகழ்வில் பிரதமர் வெளியிட்டார். மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், இலக்கியவாதிகள், தொழிலதிபர்கள், தமிழ் ஆர்வலர்கள், ஆன்மிகவாதிகள் இந்த காசி தமிழ் சங்கம நிகழ்வில் பங்கேற்று வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Tags:    

Similar News