தமிழ்நாடு (Tamil Nadu)

ஒரு சின்ன பையன் முதல்முறையா தேர்தல்ல நிக்கிறாரு, ஜெயிச்சாதான் என்ன: பிரேமலதா ஆதங்கம்

Published On 2024-06-06 09:45 GMT   |   Update On 2024-06-06 09:45 GMT
  • 39 தொகுதி நீங்க ஜெயிச்சதா அறிவிச்சிங்கள்ல...
  • அமைச்சர்களை வைத்து அதிகாரிகளை மிரட்டி தவறு செய்துள்ளீர்கள்.

விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் மகன் விஜயப்ரபாகரன் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரிடம் தோல்வியடைந்தார்..

இது தொடர்பாக சென்னை கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "50 - 60 வருசமா கட்சி நடத்துறீங்க, ஆட்சியில இருக்கீங்க. ஒரு சின்ன பையன் முதல்முறையா தேர்தல்ல நிக்கிறாரு. அப்படி ஜெயிச்சாதான் என்ன போச்சு உங்களுக்கு?

39 தொகுதி நீங்க ஜெயிச்சதா அறிவிச்சிங்கள்ல, ஒரு தொகுதில கடைசி வரைக்கும் போராடி வராரே ஒரு இளைஞர், அவரை பெரிய மனசோட நீங்க ஜெயிக்க வச்சிருந்தீங்கனா, இந்த ஆட்சியை நா தலைவணங்கி போற்றியிருப்பேன் வரவேற்றிருப்பேன்.

ஆனால் அதிலும் சூழ்ச்சி செய்து அவர் ஜெயிக்க கூடாது என்பதற்காக அவர்கள் அமைச்சர்களை வைத்து அதிகாரிகளை மிரட்டி தவறு செய்துள்ளீர்கள்.

விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி முன்னிலையில் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News