தமிழ்நாடு

சத்யபிரத சாகு (கோப்பு படம்) 

வாக்காளர்கள் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும்- தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்

Published On 2022-07-08 21:20 GMT   |   Update On 2022-07-08 21:20 GMT
  • வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவுரை.
  • இது தொடர்பாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 23-ம் பிரிவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் (மாவட்ட ஆட்சியர்கள்) மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர்களுடன் காணொலி மூலம் ஆய்வு கூட்டம் நடத்தினார்.

அக்கூட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக இந்தியத் தேர்தல் கமிஷனிடம் இருந்து பெறப்பட்ட அறிவுரைகள் அலுவலர்களிடம் பகிர்கொள்ளப்பட்டன.

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது ஆகஸ்டு 1-ந் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் 23-ம் பிரிவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி வாக்காளர் பதிவு விதிகளில் 26 பி என்ற சிறப்பு விதி சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி ஏற்கனவே பதிவு செய்து, வக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ள வாக்காளர்கள் தங்களின் ஆதார் எண்ணை பதிவு அலுவலரிடம் 6பி விண்ணப்பத்தின் மூலம் அளிக்கலாம்.

இந்த திட்டத்தின் நோக்கம் தற்போது சட்டமாக்கப்பட்டு இருப்பதால், ஆதார் எண்ணை வாக்காளர்கள் தானாக முன்வந்து அளிக்க வேண்டும். நேரடியாக ஆதார் எண்ணை அளிப்பதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் அனைவரும் தங்களின் ஆதார் எண்ணை 1.4.2023 தேதிக்குள் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News