தமிழ்நாடு

நடிகை கஸ்தூரிக்கு நவம்பர் 29 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

Published On 2024-11-17 09:47 GMT   |   Update On 2024-11-17 09:47 GMT
  • தனது கருத்துக்கு கஸ்தூரி வருத்தம் தெரிவித்தார்.
  • மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

பிராமணர் சமூகத்தினர் சார்பில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி பேசிய உரை, மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்த நிகழ்ச்சியில் அவர் தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது பலர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். இதனால் தனது கருத்துக்கு கஸ்தூரி வருத்தம் தெரிவித்தார்.

எனினும், நடிகை கஸ்தூரிக்கு எதிராக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதைத்தொடர்ந்து அவர் முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

கஸ்தூரியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் தலைமறைவானார். அவரை கைது செய்வதற்காக தனிப்படைகளும் அமைக்கப்பட்டன. இதையடுத்து ஐதராபாத் அருகே உள்ள பப்பலக்குடா பகுதியில் சினிமா தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணனின் பங்களா வீட்டில் பதுங்கி இந்த கஸ்தூரியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில், ஐதராபாத்தில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரியை போலீசார் சென்னை அழைத்து வந்தனர். சிந்தாதிரிப்பேட்டை காவல் துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது.

அதன்பிறகு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நடிகை கஸ்தூரியை நவம்பர் 29 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து நடிகை கஸ்தூரி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News