குழந்தைகள் கனவுகள் ஈடேறத் துணை நிற்போம்- முதலமைச்சர் வாழ்த்து
- ‘நேரு மாமா’ என்று அன்புடன் நினைவுகூரப்படும் ஜவஹர்லால் நேரு குழந்தைகளை மிகவும் நேசித்தார்.
- நமது உலகையும் - வாழ்வையும் ஒளிபெறச் செய்யும் குழந்தைகளுக்கு எனது அன்பும் வாழ்த்துகளும்!
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் நவம்பர் 14-ந்தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
'நேரு மாமா' என்று அன்புடன் நினைவுகூரப்படும் ஜவஹர்லால் நேரு குழந்தைகளை மிகவும் நேசித்தார். மேலும் தனது நாட்களை அவர்களுடன் கழிக்க விரும்பினார்.
குழந்தைகள் தினமான இன்று பள்ளிகளில் அவர்களை கொண்டாடும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில்,
மழலை மாறாத சிரிப்புடன் - கற்பிதங்கள் இல்லா உள்ளத்துடன் உலகையும் - சக மனிதர்களையும் எதிர்கொள்ளும் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக நம்மை வடிவமைத்துக் கொள்வது ஒவ்வொரு பொறுப்புள்ள மனிதரின் கடமை!
நமது கனவுகளைக் குழந்தைகள் மேல் ஏற்றாமல், அவர்களது கனவுகள் ஈடேறத் துணை நிற்போம்! வளமான - நலமான - பசுமையான உலகில் குழந்தைகளை வளர்ப்போம் என்ற உறுதியை குழந்தைகள் தின வாழ்த்தாகத் தெரிவிப்போம்!
நமது உலகையும் - வாழ்வையும் ஒளிபெறச் செய்யும் குழந்தைகளுக்கு எனது அன்பும் வாழ்த்துகளும்! என்று தெரிவித்துள்ளார்.