தமிழ்நாடு

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம்- இந்திய வானிலை ஆய்வு மையம்

Published On 2024-11-11 04:01 GMT   |   Update On 2024-11-11 04:01 GMT
  • 3 முறை காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவது தள்ளிப்போனது.
  • மியான்மர் கடல் பகுதியில் இருக்கும் காற்று சுழற்சி வடகிழக்கு காற்றை தடை செய்வதால்தான் இந்த தாமதம் ஏற்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையின் 2-வது சுற்றுக்காக காத்திருக்கும் சூழலில், அதற்கான காற்றழுத்த தாழ்வுப்பகுதி வங்கக்கடலில் உருவாவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

ஏற்கனவே கடந்த 6 அல்லது 7-ந் தேதிகளில் உருவாகும் என முதலில் தெரிவிக்கப்பட்டு, பின்னர் 8, 9-ந் தேதிகளில் உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக நேற்று உருவாவதற்கான சூழல் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் உருவாகவில்லை. இப்படியாக 3 முறை காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவது தள்ளிப்போனது. மியான்மர் கடல் பகுதியில் இருக்கும் காற்று சுழற்சி வடகிழக்கு காற்றை தடை செய்வதால்தான் இந்த தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இந்தநிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 36 மணி நேரத்தில் தெற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News