தமிழ்நாடு
வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு உதவ யாரும் வரவில்லை- தேசிய நெடுஞ்சாலையில் கிராம மக்கள் மறியல்
- பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
- போலீசாருக்கும், மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த அதிகனமழை காரணமாக ஏரிகள் நிரம்பி குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விக்கிரவாண்டியில் உள்ள சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கிராமத்தை பார்வையிட்டு உதவ யாரும் வரவில்லை என குற்றம் சாட்டி மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்ட மக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாருக்கும், மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.