தமிழ்நாடு
கனமழை எதிரொலி- தேனியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
- கன்னியாகுமரி, மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
- கனமழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.
தமிழகத்தில் கன்னியாகுமரி, தேனி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கன்னியாகுமரி, மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகதேனி மாவட்டத்தில் நாளை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அரசு பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.