தமிழ்நாடு

மீண்டும் ஜார்க்கண்ட் முதல்வராக பதவியேற்றார் ஹேமந்த் சோரன்

Published On 2024-11-28 10:58 GMT   |   Update On 2024-11-28 12:19 GMT
  • கவர்னரின் ஒப்புதலை அடுத்து, ஜார்க்கண்டில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் சோரன் இன்று முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.
  • ஆளுநர் சந்தோஷ் குமார் கங்குவார் பதவி பிரமாணமும் ரகசகய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

ஜார்க்கண்டில் உள்ள 81 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக கடந்த 20 மற்றும் 23ம் தேதிகளில் நடைபெற்றது. இதில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 34 இடங்களையும், காங்கிரஸ் 16 இடங்களையும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் 4 இடங்களிலும் வெற்றி பெற்றது.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 34 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததை அடுத்து, கவர்னர் சந்தோஷ் காங்வாரை சந்தித்த ஹேமந்த் சோரன் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

கவர்னரின் ஒப்புதலை அடுத்து, ஜார்க்கண்டில் நான்காவது முறையாக ஆட்சி அமைக்கும் சோரன் இன்று முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.

ஆளுநர் சந்தோஷ் குமார் கங்குவார் பதவி பிரமாணமும் ரகசகய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

பதவியேற்பு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

மேலும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரும் பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.

Tags:    

Similar News