தமிழ்நாடு

ஜார்க்கண்ட் முதல்வராக பதவியேற்ற ஹேமந்த் சோரனுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் வாழ்த்து

Published On 2024-11-28 12:19 GMT   |   Update On 2024-11-28 12:19 GMT
  • கவர்னரின் ஒப்புதலை தொடர்ந்து ஜார்க்கண்டில் நான்காவது முறையாக இன்று முதல்வராக பதவி ஏற்றார்.
  • ஹேமந்த் சோரனுக்கு ஆளுநர் சந்தோஷ் குமார் கங்குவார் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

ஜார்க்கண்டில் உள்ள 81 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக கடந்த 20 மற்றும் 23ம் தேதிகளில் நடைபெற்றது. இதில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 34 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

இதையடுத்து, கவர்னர் சந்தோஷ் காங்வாரை சந்தித்த ஹேமந்த் சோரன் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். பிறகு, கவர்னரின் ஒப்புதலை தொடர்ந்து ஜார்க்கண்டில் நான்காவது முறையாக இன்று முதல்வராக பதவி ஏற்றார்.

ஹேமந்த் சோரனுக்கு ஆளுநர் சந்தோஷ் குமார் கங்குவார் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில், இதன் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஹேமந்த் சோரனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சுய சரிதை புத்தகத்தை அவருக்கு அன்பளிப்பாக வழங்கினார்.

இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த கூறப்பட்டுள்ளதாவது:-

நமது திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சார்பில், ஜார்க்கண்டின் 14வது முதல்வராக @ஹேமந்த் சோரன் ஜே.எம்.எம் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.

ஜே.எம்.எம் தலைவர் சோரன் மற்றும் அவரது புதிய அமைச்சரவை பதவியேற்றதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.

அவரது வழிகாட்டுதலின் கீழ், ஜார்க்கண்ட் அனைத்து துறைகளிலும் தொடர்ந்து முன்னேறி, மக்களின் முன்னேற்றத்திற்காக வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று நான் நம்புகிறேன்.

வரும் நாட்களில் தமிழ்நாடு மற்றும் ஜார்க்கண்ட் இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்த நாங்கள் எதிர்நோக்குகிறோம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News