தமிழ்நாடு

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சூரியனார் கோவில் ஆதீன மடம்? - அமைச்சர் பதில்

Published On 2024-11-13 05:22 GMT   |   Update On 2024-11-13 05:22 GMT
  • நிலையில்லா மனிதராக உள்ள எடப்பாடி பழனிசாமி குறித்து பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.
  • 2026 தேர்தலில் 200 என்பது நிச்சயம். 234 என்பது லட்சியம்.

சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

சூரியனார் கோவில் ஆதீன மடத்தை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எடுப்பது குறித்து நாளைக்குள் முடிவு செய்யப்படும். சூரியனார் கோவில் ஆதீன மடத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படும்.

யாரால் முதலமைச்சர் ஆனாரோ அவரையே எதிர்த்து பேசக்கூடியவர். நிலையில்லா மனிதராக உள்ள எடப்பாடி பழனிசாமி குறித்து பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.

அரசியல் களத்தில் திமுக பலமாக இருக்கிறது. 2026 தேர்தலில் 200 என்பது நிச்சயம். 234 என்பது லட்சியம்.

போக்குவரத்து நெரிசலை குறைக்க ஒரு சில சாலையை அகலப்படுத்துவதற்குண்டான திட்டங்களை வகுத்து இருக்கிறோம். இது குறித்த ஆய்வு வருகிற 15-ந்தேதி துணை முதலமைச்சர் தலைமையில் நடைபெற உள்ளது.

போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும் வடசென்னை திட்டத்திலே அதிக முக்கியத்துவத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்துள்ளார் என்று கூறினார்.

Tags:    

Similar News