தமிழ்நாடு
தமிழகத்தில் வரும் 26-ந்தேதி மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்
- அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்பு உள்ளது.
- தென்கிழக்கு வங்கக்கடலில் 23-ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது
சென்னை:
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்பு உள்ளது.
இதனால் தென்கிழக்கு வங்கக்கடலில் 23-ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு, புதுச்சேரி காரைக்காலில் 25-ந்தேதி கனமழையும், 26-ந்தேதி மிக கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் வரும் 26-ந்தேதி மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.