தமிழ்நாடு (Tamil Nadu)

100/100 மதிப்பெண் பெறுகிறார் உதயநிதி... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2024-10-27 08:04 GMT   |   Update On 2024-10-27 08:10 GMT
  • திமுகவில் இருந்த தலைவர்கள் அனைவரும் சிறந்த பேச்சாளர்களாக திகழ்ந்தவர்கள்.
  • பேச்சுக்கலை என்பது சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த கூடிய வல்லமை படைத்தது.

சென்னை:

'என் உயிரினும் மேலான' பேச்சுப்போட்டி வெற்றியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

* திமுக என்பது பேசிப்பேசி ஆட்சியை பிடித்த இயக்கம் என்பார்கள். ஆனால் என்ன பேசினோம் என்பதை சொல்லாமல் தவிர்த்து விடுவார்கள்.

* மூடநம்பிக்கை, பிற்போக்குத்தனம், உலக வரலாறு உள்ளிட்டவை குறித்து பேசினோம் என்பதை சொல்வதில்லை.

* உலகம் முழுவதும் நடந்த புரட்சி, பெண்ணடிகை தனத்திற்கு எதிராக பேசியவர்கள் திமுக பேச்சாளர்கள்.

* திமுகவில் இருந்த தலைவர்கள் அனைவரும் சிறந்த பேச்சாளர்களாக திகழ்ந்தவர்கள்.

* பழந்தமிழர் இலக்கியங்களை பாமர மக்களுக்கும் கொண்டு சேர்த்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.

* பேச்சுக்கலை என்பது சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த கூடிய வல்லமை படைத்தது.

* நான் வைக்கும் தேர்வுகளில் எல்லாம் 100 மதிப்பெண்களை பெறுகிறார் உதயநிதி.

* இளைஞரணி செயலாளர் என்பது பதவி கிடையாது. அது பெரும் பொறுப்பு.

* நீட் தேர்வுக்கு தடை கோரி கையெழுத்து இயக்கம், நீர்நிலை தூர்வாரும் பணியை சிறப்பாக செய்தவர் உதயநிதி.

இவ்வாறு அவர் பேசினார். 

முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், களப்போரில் துணை நிற்கவுள்ள கருத்தியல் சொற்போர் வீரர்களை வாழ்த்தி வரவேற்கிறேன் என கூறியுள்ளார். 



Tags:    

Similar News