தமிழ்நாடு

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற விஜயின் அறிவிப்பு - தி.மு.க., அ.தி.மு.க. சும்மா இருக்குமா என்ன? : திருமாவளவன்

Published On 2024-11-01 06:58 GMT   |   Update On 2024-11-01 06:58 GMT
  • நாங்க கேட்குற டிமாண்ட்-லாம் பேசி, நிபந்தனையெல்லாம் உத்தரவாதப்படுத்தி அதுக்கப்பறம் அறிவித்தால் வெற்றிக்கரமாக நடத்த முடியும்.
  • அதிமுக போன்ற கட்சிகள் முன்கூட்டியே சொன்னால் கூட அதுக்கு மதிப்பு இருக்கு.

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்தி முடித்துள்ளார்.

த.வெ.க. மாநாட்டில் கூடிய இளைஞர்கள் கூட்டம் தமிழகத்தின் அரசியல் கட்சிகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது. மாநாட்டில் பேசிய விஜய் கூட்டணியை வரவேற்று அதிகாரத்தில் பங்கு தரப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தமிழக அரசியல் கட்சிகள் இடையே பெரும் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் பலரும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற விஷயத்தை விஜய் அவசரப்பட்டு அறிவித்திருக்க வேண்டாம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியுள்ளதாவது:- உதாரணத்திற்கு விசிக, தவெக-வுடன் இணைவது என்றால் அதை நான் தான் ப்ரோபோஸ் பண்ணணும். அது டிமாண்ட். நாங்கள் உங்களுடன் வருவது என்றால் எத்தனை இடங்களை தருவீர்கள், என்ன மாதிரியான அதிகாரத்தை பகிர்ந்த கொள்ள முடியும். அப்போ நான் கேட்கலாம். எனக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுங்க. 4 பேருக்கு நல்ல அதிகாரம் உள்ள பதவி கொடுங்க. எங்களுக்கு 25 இடமாவது தாங்க. இதெல்லாம் தான் டிமாண்ட். நாங்க கேட்குற டிமாண்ட்-லாம் பேசி, நிபந்தனையெல்லாம் உத்தரவாதப்படுத்தி அதுக்கப்பறம் அறிவித்தால் வெற்றிக்கரமாக நடத்த முடியும்.

அடுத்து, ஏற்கனவே 25 சதவீத ஓட்டை வைத்துக்கொண்டு இருக்கும் அதிமுக போன்ற கட்சிகள் முன்கூட்டியே சொன்னால் கூட அதுக்கு மதிப்பு இருக்கு. விஜய் பூஜ்ஜியத்தில் இருந்து தான் தொடங்கணும். அவர் இன்னும் களத்தில் வரலை. இதில் என்ன தெரிகிறது என்றால் நாம் ஆட்சிக்கு வரபோறதில்லை. சும்மா சொல்லிவைப்போம். சலசலப்பை ஏற்படுத்துவதற்கான அறிவிப்பு. அவரே சொல்றாரு தனியா ஜெயிப்போம்... ஆட்சிக்கு வருவோம் என்கிறார். அது அவருடைய நம்பிக்கை. அந்த நம்பிக்கையை வாழ்த்தணும். மக்கள் தான் அதை முடிவு பண்ணப்போறாங்க. ஓபன் அஜண்டாவை சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு வருட காலம் இருக்கும் போதே முன் கூட்டியே அறிவிக்கும்போது சுமார் 75 வருட அரசிய களத்தில் அனுபவம் பெற்ற அதிமுக, திமுகவும் எப்படி டீல் பண்ணும், கலைச்சி விடணும்-ங்கறது தெரியும்ல... என்றார். 

Tags:    

Similar News