தமிழ்நாடு

சென்னையில் இன்று அதிரடியாக குறைந்த தங்கம் விலை

Published On 2024-11-12 04:17 GMT   |   Update On 2024-11-12 04:26 GMT
  • தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1080 குறைந்து ரூ.56 ஆயிரத்து 680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.135 குறைந்து ரூ.7,085-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
  • தங்கம் விலை கிராமுக்கு ரூ.135 குறைந்து ரூ.7,085-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை:

தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே குறைந்து கொண்டிருக்கிறது.

சென்னையில் நேற்று முன்தினம் கிராம் ரூ.7,275-க்கும், ஒரு சவரன் ரூ.58,200-க்கும் தங்கம் விற்பனை ஆனது. தங்கம் விலை நேற்றும் குறைந்தது.

முந்தைய நாளை காட்டிலும் கிராமுக்கு ரூ.55 சரிந்து ரூ.7,220-க்கும், சவரனுக்கு ரூ.440 சரிந்து ரூ.57,760-க்கும் தங்கம் நேற்று விற்பனை ஆனது.

எப்போதெல்லாம் தங்கம் விலை குறையுமோ, அப்போதெல்லாம் வெள்ளியின் விலையும் குறையும். அந்தவகையில் நேற்று வெள்ளியின் விலையும் குறைந்தது. முந்தைய நாளை விட கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.102-க்கும், கிலோவுக்கு ரூ.1,000 குறைந்து ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்துக்கும் வெள்ளி நேற்று விற்பனை ஆனது.

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1080 குறைந்து ரூ.56 ஆயிரத்து 680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.135 குறைந்து ரூ.7,085-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

11-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,760

10-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,200

09-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,200

08-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,280

07-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,600

 கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

11-11-2024- ஒரு கிராம் ரூ. 102

10-11-2024- ஒரு கிராம் ரூ. 103

09-11-2024- ஒரு கிராம் ரூ. 103

08-11-2024- ஒரு கிராம் ரூ. 103

07-11-2024- ஒரு கிராம் ரூ. 102

தங்கத்தின் மீதான முதலீடு திடீரென குறைந்திருப்பதும், சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்து இருப்பதுமே தங்கம் விலை சரிவுக்கு காரணம், என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News