தமிழ்நாடு

மழை வெள்ளம் எதிரொலி: வந்தே பாரத் உள்பட 5 ரெயில்கள் ரத்து

Published On 2024-12-02 01:11 GMT   |   Update On 2024-12-02 04:38 GMT
  • சென்னை- நாகர்கோவில் வந்தே பாரத் ரெயில், சென்னை- மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து
  • காரைக்குடி-எழும்பூர் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஃபெஞ்சல் புயுல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது. புயல் கரையை கடந்த பின்னரும் கனமழை பெய்ததால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. விக்கிரவாண்டி- முண்டியபாக்கம் ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள பாலத்தில் அபாய அளவை தாண்டி நீர் செல்வதால் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னையில் இருந்து செல்லும் பகல் நேர ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை- நாகர்கோவில் வந்தே பாரத் ரெயில், சென்னை- மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதேபோல் நெல்லை- சென்னை வந்தேபாரத், மதுரை- சென்னை மற்றும் காரைக்குடி-எழும்பூர் ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது.

பின்னர் குருவாயூர் ரெயிலும் இன்று சென்னையில் இருந்து புறப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News