- தொடர் கனமழை காரணமாக 5 மாவட்டங்களில் உள்ள ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
- காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 909 ஏரிகளில் 309 ஏரிகள் நிரம்பி உள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக தொடர்ந்து மழை பெய்த நிலையில் புழல் ஏரி முழு கொள்ளவை எட்ட உள்ளது. புழல் ஏரியின் மொத்த உயரமான 21 அடியில் தற்போதைய நீர்மட்டம் 18.54 அடியாக உள்ள நிலையில் 999 கனஅடி நீர் வெளியேற்றம்
புழல் ஏரியில் இருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 184 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. புழல் ஏரிக்கான நீர்வரத்து விநாடிக்கு 999 கனஅடியாக உள்ள நிலையில் 999 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
மொத்தம் 3300 மில்லியன் கனஅடி கொண்ட புழல் ஏரியின் தற்போதைய நீர் இருப்பு 2,718 கன அடியாக உள்ளது.
இதனிடையே தொடர் கனமழை காரணமாக 5 மாவட்டங்களில் உள்ள ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 1022 ஏரிகளில் 315 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டின
அதே போல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 909 ஏரிகளில் 309 ஏரிகள் நிரம்பி உள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
75 சதவீதத்துக்கு மேல் 274 ஏரிகளும் 50 சதவீதத்துக்கு மேல் 193 ஏரிகளும் 25 சதவீதத்துக்கு மேல் 132 ஏரிகளும் நிரம்பியதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.