த.வெ.க மாநாடு: தேசிய நெடுஞ்சாலையில் "ஜீரோ டிராபிக்" முறை- காவல்துறை திட்டம்
- சென்னையில் இருந்து செல்லும் வாகனங்கள் திண்டிவனத்தில் மாற்றி விடப்படுகின்றன.
- திருச்சியில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் செஞ்சி அருகே மாற்றிவிடப்பட உள்ளன.
தமிழக வெற்றிக் கழகம் மாநாடு நாளை விழுப்புரம் வி.சாலையில் நடைபெறுகிறது.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக மாநாட்டையொட்டி, சென்னையில் இருந்து திருச்சி செல்லும் வாகனங்களுக்கு பாதை மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம், வி.சாலை நெடுஞ்சாலையில் சாதாரணமாகவே லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மாநாடு முன்னிட்டு கூடுதலாக 3 லட்சத்திற்கும் மேல் வாகனங்கள் வரும் என்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மாநாட்டு மேடை பகுதி முக்கிய சாலையை ஒட்டி அமைந்து இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால், மாநாடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஜீரோ டிராபிக் முறையை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது, ஜீரோ டிராபிக் என்றால் வெளி வாகனங்களுக்கு அனுமதி இல்லை. தவெக மாநாட்டிற்கு தொடர்புடைய வாகனங்களுக்கு மட்டுமே அனுமது வழங்கப்படும்.
மேலும், போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னை- திருச்சி செல்லும் வாகனங்களுக்கு மாற்று வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து செல்லும் வாகனங்கள் திண்டிவனத்தில் மாற்றிவிடப்படுகின்றன.
திருச்சியில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் செஞ்சி அருகே மாற்றிவிடப்பட உள்ளன. போக்குவரத்து மாற்றம் காரணமாக 15 முதல் 20 கி.மீ தூரம் வரை பயண நேரம் அதிகமாகலாம் எனவும் கூறப்படுகிறது.