உலகம்

பனி குகை இடிந்து விபத்து: சுற்றுலா பயணி உயிரிழப்பு- இருவர் மாயம்

Published On 2024-08-26 12:53 GMT   |   Update On 2024-08-26 12:54 GMT
  • பனிக்கட்டியின் அடியில் 4 பேர் சிக்கிய நிலையில், இருவர் மீட்கப்பட்டனர்.
  • காணாமல் போன மேலும் இருவரை மீட்பு படையினர் தேடி வருகின்றனர்.

தென்கிழக்கு ஐஸ்லாந்தில் சுற்றுலா குழு ஒன்று சென்று கொண்டிருந்தபோது பனி குகை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 25 பேர் கொண்ட சுற்றுலாக் குழு ஒரு வழிகாட்டியுடன் சேர்ந்து பனிப்பாறை ப்ரீடாமெர்குர்ஜோகுல்லுக்கு சென்றபோது, திடீரென பனி குகை இடிந்து விழுந்துள்ளது.

இந்த விபத்தில், பனிக்கட்டியின் அடியில் 4 பேர் சிக்கியதாகவும், பின்னர் இருவர் மீட்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட இருவரும் பலத்த காயம் அடைந்திருந்த நிலையில், அவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றொரு நபர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதைதொடர்ந்து, காணாமல் போன மேலும் இருவரையும் தேடும் பணியை நேற்று தொடங்கிய மீட்புப் படையினர், இன்றும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

நிலைலமை கடினமாக உள்ள சூழலில் ஏராளமான மீட்பு படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஐஸ்லாந்தின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ஜோகுல்சர்லோன் என்ற பனிப்பாறை குளத்திற்கு அருகில் விபத்து நடந்த பனிப்பாறை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News