செய்திகள்

ஜெருசலேம் நகரில் பிரிட்டன் நாட்டு மாணவி குத்திக் கொலை

Published On 2017-04-15 06:28 GMT   |   Update On 2017-04-15 06:28 GMT
இஸ்ரேல் தலைநகரான ஜெருசலேமில் ஓடும் டிராம் வாகனத்துக்குள் பிரிட்டன் நாட்டை சேர்ந்த மாணவியை பாலஸ்தீனத்தை சேர்ந்தவர் துடிதுடிக்க குத்திக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெருசலேம்:

இயேசு கிறிஸ்து பிறந்த நகரமான ஜெருசலேமில் நேற்று புனித வெள்ளி திருநாள் மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நகரம்  முழுவதும் உற்சாக கோலத்தில் இருந்தபோது இங்குள்ள ஹீப்ரூ (எபிரேயம்) பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஹன்னா பிலடான்(23) என்ற மாணவி நேற்று பழைய ஜெருசலேம் நகரின் வழியாக டிராமில் (ரெயில் போல சாலையின் இடையில் ஓடும் வாகனம்) சென்று கொன்று கொண்டிருந்தார்.

அப்போது, அதே வாகனத்தில் வந்த ஒரு பயணி, கண்ணிமைக்கும் நேரத்துக்குள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஹன்னாவை வெறித்தனமாக தாக்கினார். உடலின் பல பகுதிகளில் கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த ஹென்னா, உயிருக்கு போராடினார்.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த சகப் பயணிகள் இந்த கொலைவெறி தாக்குதல் நடத்திய நபரை மடக்கிப் பிடித்தனர். மனநிலை பாதிக்கப்பட்ட நபரைப் போல் தோன்றிய அவர், பாலஸ்தீனம் பகுதியை சேர்ந்த ஜாமி டமிமி(57) என்றும் கிழக்கு ஜெருசலேம் நகரில் வசித்து வருகிறார் என்பதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.



இதற்கிடையில், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஹன்னா பிலடான் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தாக்குதலை இஸ்லாமிய தீவிரவாதிகளின் கோரச்செயல் என இஸ்ரேல் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

தங்கள் நாட்டு மண்ணில் பிரிட்டனை சேர்ந்த மாணவி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும், கவலையும் அளிப்பதாக இஸ்ரேல் அதிபர் ரேவ்வென் ரிவ்லின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்களை பயங்கரவாதத்தால் எங்களை வென்று விட முடியாது. இங்கு வாழும் மக்களின் வாழ்க்கையை சீர்குலைத்து விட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பலியான ஹன்னா பிலடான், கலாச்சார பரிவர்த்தனை அடிப்படையில் பிரிட்டன் நாட்டில் இருந்து ஹீப்ரூ பல்கலைக்கழகத்தில் பயில தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News