செய்திகள்

மியான்மர் ஆலோசகர் ஆங் சாங் சூகியுடன் வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சந்திப்பு

Published On 2018-05-11 07:33 GMT   |   Update On 2018-05-11 07:33 GMT
மியான்மர் ஆலோசகர் ஆங் சாங் சூகி மற்றும் ராணுவத் தளபதி ஜெனரல் மன் ஆங் ஹிலிங் ஆகியோரை இன்று சுஷ்மா சுவராஜ் சந்தித்து பேசியுள்ளார். #SushmaSwaraj #AungSanSuuKyi
நே பை தா:

இந்தியாவின் மிக முக்கிய அண்டை நாடாக விளங்கும் மியான்மர், இந்தியாவுடனான எல்லையை 1640 கி.மீட்டர் தூரத்துக்கு பகிர்ந்து உள்ளது. பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாகலாந்து, மணிப்பூர் ஆகியவை மியான்மர் நாட்டு எல்லையை ஒட்டி அமைந்துள்ளதால், மியான்மருடனான உறவு முக்கியமான ஒன்றாகும்.

இதற்கிடையே, இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் 2 நாள் பயணமாக மியான்மருக்கு நேற்று சென்றார். மியான்மர் தலைநகர் நே பை தா சென்றடைந்த சுஷ்மா சுவராஜுக்கு, மியான்மருக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி, மியான்மர் வெளியுறவு கொள்கை மந்திரி உ மியிண்ட் து உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதைஅடுத்து, மியான்மர் அதிபர் வின் மிண்டை வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் சந்தித்து பேசினார்.

இந்நிலையில், மியான்மர் ஆரசு ஆலோசகர் ஆங் சாங் சூகி மற்றும் மியான்மர் ராணுவத் தளபதி ஜெனரல் மன் ஆங் ஹிலிங் ஆகியோரை சுஷ்மா சுவராஜ் இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இந்தியா-மியான்மர் இடையிலான 7 முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். #SushmaSwaraj #AungSanSuuKyi
Tags:    

Similar News