செய்திகள்

பயங்கரவாதத்தின் விளைவுக்கு ஆப்கன் உதாரணம் - ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் பேச்சு

Published On 2018-06-10 04:08 GMT   |   Update On 2018-06-10 06:17 GMT
பயங்கரவாதத்தின் விளைவுக்கு ஆப்கானிஸ்தான் ஒரு துரதிர்ஷ்டவசமான உதாரணம் என ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பேசியுள்ளார். #SCOSummit2018 #PMModi
பீஜிங்:

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு சீனாவின் குவின்காடோ நகரில் நேற்று தொடங்கியது. இதற்காக நேற்று அங்கு சென்ற பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், தஜிகிஸ்தான் அதிபர் எமோமாலி ரஹ்மோன் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாட்டு அதிபர் ஷவ்கத் மிர்ஸியோயேவ் ஆகியோரை சந்தித்து இந்தியாவுடனான இந்நாடுகளின் நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், இன்று மாநாட்டின் அமர்வு தொடங்கியது. இதில், உறுப்பினராக உள்ள அனைத்து நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

பயங்கரவாதத்தின் விளைவு என்ன? என்பதற்கு ஆப்கானிஸ்தான் துரதிர்ஷ்டவசமான உதாரணம். அங்கு அமைதியை நிலைநாட்ட அந்நாட்டு அதிபர் அஷ்ரப் ஞானி எடுத்து வரும் துணிச்சலான முடிவுக்கு பிராந்திய நாடுகள் மதிப்பளிக்க வேண்டும். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள நாடுகளில் இருந்து வெறும் 6 சதவிகிதம் பேர் மட்டுமே இந்தியாவுக்கு சுற்றுலா வருகின்றனர். இதனை எளிதாக இரட்டிப்பாக மாற்ற இயலும்.

ஷாங்காய் அமைப்பின் உணவு மற்றும் புத்த கலாச்சார மாநாட்டை நடத்த இந்தியா தயாராக உள்ளது. பிராந்திய நாடுகளுடன் தொடர்பு எல்லா வழியிலும் நடந்து வருகிறது. பிராந்திய நாடுகளை ஒன்றாக இணைப்பது இந்த மாநாட்டின் முக்கிய அம்சமாக இருக்கும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
Tags:    

Similar News