செய்திகள்
பிரிட்டன் பாராளுமன்ற தடுப்பு வேலி அருகே படுவேகமாக வந்த கார் மோதி பலர் காயம்
லண்டன் நகரில் உள்ள பிரிட்டன் பாராளுமன்றம் அருகேயுள்ள தடுப்பு வேலி அருகே படுவேகமாக வந்த கார் மோதியதில் பலர் காயம் அடைந்ததாக ஸ்காட்லாந்து யார்ட் போலீசார் தெரிவித்துள்ளனர். #BritishParliament #BritishParliamentCarcrash
லண்டன்:
லண்டன் நகரில் உள்ள பிரிட்டன் பாராளுமன்றம் வாசல் அருகேயுள்ள சாலையில் (உள்ளூர் நேரப்படி) இன்று காலை சுமார் 7.30 மணியளவில் சிக்னலுக்காக சில வாகனங்கள் நின்றிருந்தன.
அப்போது, அந்த சாலையில் தவறான பாதையில் படுவேகமாக சீறிவந்த கார் அங்கிருந்தவர்கள் மீது மோதியதில் பலர் காயம் அடைந்ததாக ஸ்காட்லாந்து யார்ட் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மோதிய வேகத்தில் அந்த கார் நிலை தடுமாறி குலுங்கும் அளவுக்கு அதிகமான வேகத்தில் வந்த கார், பாராளுமன்ற வாசலில் உள்ள இரும்பு தடுப்பு வேலியின் மீது பயங்கரமாக மோதி நின்றது.
அந்த காரை ஓட்டிவந்த நபரை உடனடியாக கைது செய்த போலீசார், கைவிலங்கிட்டு அழைத்து சென்றனர்.
இந்த விபத்தில் சாலையை கடப்பதற்காக சைக்கிளில் காத்திருந்த இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
இந்த சம்பவம் தற்செயலாக ஏற்பட்ட விபத்தா? அல்லது, காரை ஏற்றி மக்களை கொல்ல முயன்ற தீவிரவாத தாக்குதலா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தின் எதிரொலியாக பாராளுமன்ற சதுக்கத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வெஸ்ட்மின்ஸ்ட்டர் சுரங்க ரெயில் நிலையம் மூடப்பட்டது. விக்டோரியா டவர் கார்டன்ஸ், மில்பேங்க் உள்ளிட்ட பகுதிகளும் தற்காலிக தடுப்பு வேலிகள் மூலம் அடைக்கப்பட்டுள்ளன. #BritishParliament #BritishParliamentCarcrash