செய்திகள்
அமெரிக்காவுக்குள் நுழையும் குடியேறிகளை தடுக்கும் டிரம்ப்பின் உத்தரவுக்கு கோர்ட் இடைக்கால தடை
அனுமதியின்றி அமெரிக்காவுக்குள் நுழையும் குடியேறிகளை எல்லைப்பகுதியில் தடுத்து நிறுத்த அதிபர் டொனால்ட் டிரம்ப் பிறப்பித்த உத்தரவுக்கு கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. #Trump #USasylum
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்ற பின்னர் அங்கு வெளிநாட்டினருக்கு குடியுரிமை அளிக்கும் விவகாரத்தில் மிகுந்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். அண்டைநாடான மெக்சிகோ நாட்டு எல்லை வழியாக அமெரிக்காவில் அடைக்கலம் தேடிவரும் மக்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.
அவ்வகையில், உரிய அனுமதி இல்லாமல் அமெரிக்காவுக்குள் நுழைந்ததாக 2382 இந்தியர்கள் கைது செய்யப்பட்டு அந்நாட்டில் உள்ள 83 சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மெக்சிகோ நாட்டில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அமெரிக்காவில் அடைக்கலம் தேடி வந்து கொண்டிருப்பதாக அறிந்த அதிபர் டிரம்ப், அவர்களை எல்லைப்பகுதியில் தடுத்து நிறுத்துமாறு குடியுரிமை துறை அதிகாரிகளுக்கு கடந்த 8-ம் தேதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து அமெரிக்க பொது சிவில் உரிமை சங்கம் சார்பில் அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அமெரிக்காவுக்குள் அடைக்கலம் தேடி எல்லைப்பகுதியில் அனுமதி கோரினாலும், அல்லது நாட்டுக்குள் நுழைந்து விட்டாலும் அதற்கான உரிமை நமது நாட்டு அரசியலமைப்பு சட்டம் மூலம் குடியேறிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.
ஆனால், நாட்டின் பாதுகாப்பு கருதி இத்தகைய நடவடிக்கையை எடுக்க வேண்டியுள்ளதாக அரசு தரப்பில் வாதாடியதை ஏற்றுகொண்ட சுப்ரீம் கோர்ட் இதுதொடர்பாக அதிபர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என தீர்ப்பளித்தது.
இந்நிலையில், அனுமதியின்றி அமெரிக்காவுக்குள் நுழையும் குடியேறிகளை எல்லைப்பகுதியில் தடுத்து நிறுத்த அதிபர் டொனால்ட் டிரம்ப் பிறப்பித்த உத்தரவுக்கு சான் பிரான்சிஸ்க்கோ மாவட்ட தேசிய கோர்ட் நீதிபதி ஜான் டிகார் இடைக்கால தடை விதித்துள்ளார். #Trump #USasylum