செய்திகள்

தைவான் பிரதமராக சூ தசெங்-சாங் நியமனம்

Published On 2019-01-12 04:21 GMT   |   Update On 2019-01-12 04:21 GMT
தைவானில் முன்னாள் பிரதமரும், ஜனநாயக முற்போக்கு கட்சியின் முன்னாள் தலைவருமான சூ தசெங்-சாங்கை புதிய பிரதமராக அதிபர் தசாய் இங்-வென் நியமித்தார். #TaiwanPM
தைபே:

தைவானில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பிரதமர் வில்லியம் லையின் ஆளும் ஜனநாயக முற்போக்கு கட்சி பெருத்த பின்னடவை சந்தித்தது. தைவானை பொறுத்தமட்டில் உள்ளூர் தேர்தலில் ஆளும் கட்சி தோல்வியை சந்திக்கும் போது, தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் பதவி விலகுவது வழக்கமாக உள்ளது.

அந்த வகையில் பிரதமர் வில்லியம் லை தனது பதவியை ராஜினாமா செய்வதாக நேற்றுமுன்தினம் இரவு அறிவித்தார். அதனை தொடர்ந்து முன்னாள் பிரதமரும், ஜனநாயக முற்போக்கு கட்சியின் முன்னாள் தலைவருமான சூ தசெங்-சாங்கை புதிய பிரதமராக அதிபர் தசாய் இங்-வென் நேற்று நியமித்தார்.

இதற்கு முன் சூ தசெங்-சாங் கடந்த 2006-ம் ஆண்டு பிரதமராக நியமிக்கப்பட்டார். பின்னர் அவர் 2007-ம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் அந்த தேர்தலில் அவர் தோல்வியை தழுவினார். #TaiwanPM

Tags:    

Similar News