செய்திகள்
புர்கினியா பாசோ நாட்டில் தேவாலயம் மீது துப்பாக்கிச்சூடு: 6 பேர் பலி
மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினியா பாசோவில் தேவாலயம் மீது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் தாக்கிய துப்பாக்கி சூட்டில் 6 பேர் பலியாகினர். #churchattack
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று புர்கினியா பாசோ. இங்குள்ள சவும் மாகாணத்தின் தலைநகர் டிஜிபோ. இதன் அருகில் உள்ள சிறிய நகரம் சில்காட்ஜி. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இங்குள்ள தேவாயலம் ஒன்றில் பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது.
பிரார்த்தனை கூட்டம் முடியும் தருவாயில் மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கி ஏந்திய கும்பல் ஒன்று தேவாயலத்திற்குள் புகுந்து கண்மூடித்தனமாக சுட்டனர். இதில் பாதிரியார், அவரது மகன்கள் இருவர் மற்றும் பிரார்த்தனைக்கு வந்த மூன்று பேர் என 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கடந்த 2016-ல் இருந்து மேற்கு ஆப்பிரிக்காவில் அல்-கெய்தா, ஐஎஸ் பயங்கரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதனால் அவர்கள் தாக்குதலில் நடத்தியிருக்கலாம் என கருதப்படுகிறது. மேலும் தொடர் தாக்குதல் நடத்த இருக்கிறார்களா? என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.
கடந்த வெள்ளிக்கிழமை புர்கினியா பாசோவின் கிழக்குப்பகுதியில் ஐந்து ஆசிரியர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. #churchattack