செய்திகள் (Tamil News)
பிரதமர் மோடி

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மோடி சிறப்பாக செயல்படுகிறார் - அமெரிக்க எம்.பி. பாராட்டு

Published On 2021-05-20 06:47 GMT   |   Update On 2021-05-20 06:47 GMT
கொரோனா நோய் தொற்று பரவலால் கடுமையான துன்பத்துக்கு ஆளாகி உள்ள இந்திய மக்களுக்கு எனது வருத்தத்தை பகிர்ந்து கொள்கிறேன் என்று அமெரிக்க எம்பி கூறியுள்ளார்.

வாஷிங்டன்:

குடியரசு கட்சி எம்.பி.யான வில்சன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறி இருப்பதாவது:-

கொரோனா நோய் தொற்று பரவலால் கடுமையான துன்பத்துக்கு ஆளாகி உள்ள இந்திய மக்களுக்கு எனது வருத்தத்தை பகிர்ந்து கொள்கிறேன். தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த இக்கட்டான சூழலில் இந்தியாவுக்கு அமெரிக்கா துணை நிற்கும். இந்தியா மிகவும் நெருக்கடியான கால கட்டத்தில் இருக்கும் இந்த நேரத்தில் பிரதமர் மோடியின் நடவடிக்கைகள் சிறப்பாக இருக்கின்றன.


இந்திய, அமெரிக்க வர்த்தக கூட்டமைப்பினரு டன் எனக்கு நெருங்கிய நட்பு உண்டு. அவர்களிடம் இந்தியாவில் நிலவும் சூழ்நிலைகள் குறித்து கேட்டு தெரிந்துகொள்வதுடன் இந்தியாவுக்கு தேவையான உதவிகளை அளிக்க என்னால் முடிந்த அளவுக்கு முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன். இந்த பெரும் சவாலில் இருந்து இந்தியா விரைவில் மீண்டு வரும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Similar News