உலகம் (World)
பாகிஸ்தானின் புதிய தலைமை நீதிபதி

பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி பொறுப்பேற்பு

Published On 2022-02-02 09:38 GMT   |   Update On 2022-02-02 10:00 GMT
பாகிஸ்தானின் புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில் ராணுவ உயர் அதிகாரிகள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பாகிஸ்தானின் 28-வது தலைமை நீதிபதியாக நீதிபதி உமர் அதா பண்டியல் பொறுப்பேற்றுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முன்னிலையில் நீதிபதி உமர் அதா பண்டியலுக்கு பாகிஸ்தான் அதிபர் டாக்டர் ஆரிப் அல்வி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இதன் விழாவில் ராணுவ உயர் அதிகாரிகள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக தலைமை நீதிபதியாக பதவியில் இருந்த நீதிபதி குல்சார் அகமதுவின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இன்று முதல் புதிய தலைமை நீதிபதியாக உமர் அதா பண்டியல் பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்.. ஏழைகள், இளைஞர்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்கும் பட்ஜெட்- பிரதமர் மோடி பேச்சு

Similar News