உலகம் (World)

இன்றைய ஸ்பெஷல் 'போதை' பீட்சா.. ஜோராக நடந்த வியாபாரம்.. தட்டித்தூக்கிய போலீஸ்..!

Published On 2024-10-23 13:26 GMT   |   Update On 2024-10-23 13:26 GMT
  • கடையின் மேலாளரை அவரது வீட்டிற்கு சென்று போலீசார் கைது செய்துள்ளனர்.
  • தொடர்ந்து கண்காணித்து வந்த போலீசார் போதைப்பொருளை விநியோகிக்கும் கும்பலை கைது செய்துள்ளது.

மேற்கு ஜெர்மனியில் உள்ள பீட்சா கடையில் ஒரு குறிப்பிட்ட பீட்சாவை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டிய சம்பவத்தை தொடர்ந்து அங்கு போலீசார் நடத்திய விசாரணையில் அதிர வைக்கும் உண்மைகள் வெளிவந்துள்ளன.

"நம்பர் 40" என்று குறிப்பிட்ட பீட்சாவை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டுவதாக வெளியான தகவலை தொடர்ந்து போலீசார் ரகசியமாக அந்த கடையை கண்காணித்தனர். அப்போது பீட்சாவுடன் சைட் டிஷ்ஷாக கொக்கைன் என்னும் போதைப்பொருளும் வழங்கப்பட்டதே மக்கள் அதன் மீது ஆர்வம் காட்டியதற்கு காரணம் என தெரியவந்தது.

இதையடுத்து கடையின் மேலாளரை அவரது வீட்டிற்கு சென்று போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர் வீட்டில் இருந்து 268,000 யூரோ ரொக்கம், 1.6 கிலோ கொக்கெய்ன் மற்றும் 400 கிராம் கஞ்சா உட்பட பெருமளவிலான போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையடுத்து விசாரணைக்குப் பின் கடை மேலாளாரை போலீசார் விடுத்துள்ளனர். இருப்பினும் அவர் தொடர்ந்து போதைப்பொருள் விற்பனையை செய்து வந்துள்ளார். அவரை தொடர்ந்து கண்காணித்து வந்த போலீசார் போதைப்பொருளை விநியோகிக்கும் கும்பலை கைது செய்துள்ளது.

Tags:    

Similar News