உலகம் (World)

அமெரிக்கா விரைவில் திவாலாகும்- எலான் மஸ்க் எச்சரிக்கை

Published On 2024-10-23 02:36 GMT   |   Update On 2024-10-23 02:36 GMT
  • அமெரிக்காவில் கடந்த மே மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
  • அமெரிக்க அரசாங்கம் செலவினங்களை தீவிரமாக குறைக்க வேண்டும்.

வாஷிங்டன்:

அமெரிக்காவில் அடுத்த மாதம் (நவம்பர்) 5-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்கு தேர்தல்களம் சூடுபிடித்துள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிசும் (வயது 60), குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர். தேர்தலுக்கு இன்னும் ஒருசில நாட்களே உள்ளதால் இருவரும் அனல்பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே அமெரிக்காவில் கடந்த மே மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் ஜனாதிபதி ஜோ பைடன் அரசாங்கத்தில் நாட்டின் கடன் சுமார் ரூ.3 ஆயிரம் லட்சம் கோடியை தாண்டியதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து உலக பணக்காரரும், எக்ஸ் நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது அமெரிக்க அரசாங்கம் செலவினங்களை தீவிரமாக குறைக்க வேண்டும். இல்லையெனில் நாடு விரைவில் திவாலாகும் அபாயம் இருப்பதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இவர் ஏற்கனவே டிரம்புக்கு ஆதரவாக சமூகவலைதளத்தில் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். மேலும் டிரம்பின் பிரசார குழுவினருக்கு நிதி உதவியையும் வாரி வழங்குகிறார். இந்தநிலையில் ஜோ பைடன் அரசாங்கம் குறித்து அவர் விமர்சித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News