உலகம்
பாகிஸ்தானில் பெரும்பான்மையை இழந்தது இம்ரான்கானின் அரசு
பெரும்பான்மையை இழந்துள்ளதால் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே இம்ரான்கான் அரசு கடும் பின்னடைவை சந்தித்துள்ளது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கான் அரசு மீது எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளன.
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிக்கு இம்ரான் கானும், அவரது அரசும் தான் காரணம் என்று பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இத்தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளன.
இதற்கிடையே இம்ரான் கானுக்கு அவரது சொந்த கட்சியிலும், கூட்டணி கட்சியிலும் எதிர்ப்பு கிளம்பியது. ஆளுங்கட்சியைச் சேர்ந்த 24 எம்.பி.க்கள், எதிர்க்கட்சிகளுடன் கைகோர்த்து அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக தெரிவித்தனர்.
நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நாளை முதல் 3 நாட்கள் விவாதம் நடைபெறும் என்றும் ஏப்ரல் 3-ந்தேதி நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனால் இம்ரான் கானுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்புக்கு முன்பே இம்ரான்கான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்வார் என்று தகவல் வெளியானது. ஆனால் அவர் ராஜினாமா செய்யவில்லை. நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ள இம்ரான்கான் முடிவு செய்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பை ஆளுங்கட்சி எம்.பி.க்கள் தவிர்க்க வேண்டும் அல்லது பங்கேற்க கூடாது என்று இம்ரான்கான் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் பிரதமர் இம்ரான்கான் அரசு தனது பெரும்பான்மையை இழந்துள்ளது. இம்ரான்கான் அரசுக்கு ஆதரவளித்து வந்த முக்கிய கூட்டணி கட்சியான முட்டாஹிதா குலாமி இயக்க பாகிஸ்தான் (எம்.கியூ.எம்.பி.) கட்சி தனது ஆதரவை வாபஸ் பெறுவதாக இன்று அறிவித்தது. இதனால் இம்ரான்கான் ஆட்சியின் பலம் 164 ஆக குறைந்தது. 342 உறுப்பினர் கொண்ட பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு 172 உறுப்பினர்கள் தேவை.
இம்ரான்கானின் தெஜ்ரிக் கட்சிக்கு 155 எம்.பி.க்கள் உள்ளனர். கூட்டணி கட்சிகளை சேர்ந்த 23 எம்.பி.க்கள் ஆதரவுடன் அவர் பிரதமர் ஆனார்.
தற்போது முக்கிய கூட்டணி கட்சியான எம்.கியூ.எம்.பி. கட்சி தனது ஆதரவை வாபஸ் பெற்றதால் இம்ரான்கான் அரசு பெரும்பான்மையை இழந்தது. மேலும் எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக எம்.கியூ.எம்.பி. கட்சி தெரிவித்துள்ளது. இதையடுத்து எதிர்க்கட்சிகளின் பலம் 177 ஆக உயர்ந்தது.
பெரும்பான்மையை இழந்துள்ளதால் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே இம்ரான்கான் அரசு கடும் பின்னடைவை சந்தித்துள்ளது.
ஏற்கனவே சொந்த கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் தற்போது கூட்டணி கட்சியும் ஆதரவை வாபஸ் பெற்றுள்ளதால் இம்ரான் கான் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வார் என்று தெரிகிறது.

இதையும் படியுங்கள்... இஸ்ரேல் அரபு பயங்கரவாத அலையில் சிக்கியுள்ளது - பிரதமர் நப்தாலி பென்னட் வேதனை