உலகம்
டொனால்டு டிரம்பின் 43 அடி உயர நிர்வாண சிலை அகற்றம் - வீடியோ
- அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.
- குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். அதிபர் தேர்தலுக்கான பிரசார வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் அருகே முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் 43 அடி உயர நிர்வாண சிலை 2 நாட்களுக்கு முன்பு நிறுவப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வந்தன.
இந்நிலையில் சர்ச்சைக்குரிய அந்த சிலை இன்று அகற்றப்பட்டுள்ளது. ஆனால் யார் இந்த சிலையை வைத்தார்கள் என்ற தகவல் இன்னும் தெரியவில்லை.