உலகம்

ஷாப்பிங் மாலில் மர்மநபர் தாக்குதல்: கத்திக்குத்து, துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி

Published On 2024-04-13 09:53 GMT   |   Update On 2024-04-13 10:01 GMT
  • இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை உட்பட எட்டு பேர் சிட்னியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
  • தாக்குதலுக்கு பிறகு ஷாப்பிங் மாலில் இருந்து நூற்றுக்கணக்கான மக்களை காவல்துறையினர் வெளியேற்றினர்

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில் இன்று பிற்பகல் 4 மணியளவில் (உள்ளூர் நேரம்) நுழைந்த ஒருவர் கையில் இருந்த துப்பாக்கி மற்றும் கத்தியை வைத்து மற்றவர்களை தாக்கியதில் குறைந்தது 4 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை உட்பட எட்டு பேர் சிட்னியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களின் நிலைமைகள் இன்னும் தெரியவில்லை என்று தி சிட்னி மார்னிங் ஹெரால்ட் தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்திய அந்த நபரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தாக்குதலுக்கு பிறகு ஷாப்பிங் மாலில் இருந்து நூற்றுக்கணக்கான மக்களை காவல்துறையினர் வெளியேற்றினர். இனிமேல் யாரும் இங்கு வரவேண்டும் என்று காவல்துறை தரப்பில் இருந்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News