உலகம்
நேபாளத்தில் தொடர் நிலநடுக்கம் - வீடுகள் இடிந்து 6 பேர் பலி
- நேபாளத்தில் இன்று அதிகாலை ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி உள்ளது.
- நேற்று காலை முதல் இன்று காலை வரை 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
காத்மண்டு:
நேபாள நாட்டில் இன்று அதிகாலை 1.57 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.
நேற்று காலை நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் ரிக்டரில் 4.5 அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது.
டோட்டி மாவட்டத்தில் நிலநடுக்கத்தால் வீடு இடிந்து விழுந்ததில் 3 பேர் பலியாகினர் என முதல் கட்ட தகவல் வெளியானது.
இந்நிலையில், நிலநடுக்கத்தால் வீடுகள் இடிந்து விழுந்ததில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது என போலீசார் தெரிவித்தனர்.