உலகம்

சுற்றுலா சென்ற இடத்தில் விபரீதம்: 6 வயது சிறுமியின் உயிரை பறித்த தாயின் கவனக்குறைவு

Published On 2023-07-31 10:31 GMT   |   Update On 2023-07-31 10:31 GMT
  • குழந்தை நீந்தி கொண்டிருப்பது தெரியாமல் அச்சிறுமியின் தாய் படகை இயக்கினார்
  • 911 எண்ணை தொடர்பு கொண்டனர். ஆனால் நீண்ட நேரமாக தொடர்பு கிடைக்கவில்லை

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் அரிதான ஒரு விபத்தில், ஒரு தாயின் கவனக்குறைவால் அவரின் 6-வயது மகள் பலியானார். மரிகோபா கவுண்டி ஷெரீஃப் அலுவலகத்தின் அறிக்கையின்படி இந்த சம்பவம் இரு தினங்களுக்கு முன், அரிசோனாவில் உள்ள லேக் பிளசன்ட் ஏரியில் நடந்தது.

அந்த ஏரியில் ஒரு படகில் இரு குடும்பத்தை சேர்ந்த 12 பேர் பொழுதுபோக்கிற்காக சென்றனர். ஏரிப்பகுதியில் அந்த படகு நிறுத்தப்பட்டது. அவர்களின் ஒரு குடும்பத்தை சேர்ந்த சிறுமி, அங்கு உள்ள நீர்பிடிப்பு பகுதியில் நீந்தி விளையாடி கொண்டிருந்தார்.

படகின் பின்புறம் தனது குழந்தை நீந்தி கொண்டிருப்பது தெரியாமல் அச்சிறுமியின் தாய் அந்த படகை இயக்கினார். அப்பொழுது எதிர்பாராத விதமாக படகு இயக்கக்கூடிய இயந்திரத்தின் இறக்கையில் சிக்கி சிறுமியின் கால் துண்டானது.

நீந்தி கொண்டிருந்த அச்சிறுமியின் தந்தை படகின் அருகே நீரில் யாரோ தவிப்பதை அறிந்து வேகமாக அருகே வந்தார். அது தங்கள் மகள் என இருவரும் தெரிந்து கொண்டவுடன், அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, அவசர உதவிக்கான 911 எண்ணை தொடர்பு கொண்டனர். ஆனால் நீண்ட நேரம் தொடர்பு கிடைக்காமல் தவித்தனர்.

பிறகு அருகில் இருந்தவர்களின் படகில் அச்சிறுமியை ஏற்றி கரைக்கு கொண்டு சென்றனர்.

ஏரிக்கரையில் இருந்த அதிகாரிகளும், தீயணைப்பு வீரர்களும் உடனடியாக அவசர உதவி அளித்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு அச்சிறுமியை கொண்டு சென்றனர்.

அச்சிறுமி வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து காவல்துறை கூறியிருப்பதாவது:-

இது விபத்துதான். இருந்தாலும் நாங்கள் விசாரித்து வருகிறோம். படகில் இருந்த 12 பேரும் உயிர் காக்கும் மேல்சட்டைகளை அணிந்திருந்தனர். யாரும் மது அருந்தியிருக்கவில்லை.

இவ்வாறு காவல்துறை தெரிவித்தது.

Tags:    

Similar News