உலகம்

நேபாள தேர்தல்

நேபாள பாராளுமன்ற தேர்தல் - 61 சதவீதம் வாக்குப்பதிவு

Published On 2022-11-20 20:40 GMT   |   Update On 2022-11-20 20:40 GMT
  • பாராளுமன்ற தேர்தலில் 61 சதவீத ஓட்டுகள் பதிவானதாக நேபாள தேர்தல் கமிஷன் தெரிவித்தது.
  • தேர்தல் இறுதி முடிவுகள் ஒரு வாரத்திற்குள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காத்மாண்டு:

நேபாளத்தில் 275 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றம், 550 உறுப்பினர்களை கொண்ட 7 மாகாண சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது.

இந்த தேர்தலில் 1.79 கோடி வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். மொத்தம் 22 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பாராளுன்றம் தேர்தலில் போட்டியிடும் 2,412 வேட்பாளர்களில் 867 பேர் சுயேட்சைகள்.

பாராளுமன்றத்துக்கான 275 உறுப்பினர்களில் 165 பேர் நேரடி வாக்கு மூலமாகவும், மீதமுள்ள 110 பேர் விகிதாச்சார அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுவார்கள். இதேபோல் மொத்தமுள்ள 550 சட்டப்பேரவை உறுப்பினர்களில் 330 பேர் நேரடியாகவும் 220 பேர் விகிதாசார முறையிலும் தேர்வு செய்யப்படுவார்கள்.

காலை 7:00 மணிக்கு ஓட்டுப் பதிவு துவங்கியது. காலை முதலே பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து ஓட்டுப்போட்டனர். மாலை 5:00 மணிக்கு ஓட்டுப் பதிவு நிறைவடைந்தது.

இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் 60 சதவீத ஓட்டுகள் பதிவானதாக நேபாள தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. பொதுத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஆளும் நேபாள காங்கிரஸ் கூட்டணி தேர்தலில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் தொங்கு பாராளுமன்றம் அமையலாம் என்றும், போதுமான அரசியல் ஸ்திரத்தன்மையை வழங்க வாய்ப்பில்லாத அரசு அமையும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கணித்துள்ளனர். தேர்தல் இறுதி முடிவுகள் ஒரு வாரத்திற்குள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News