உலகம்

பிரேசிலில் விபத்தில் சிக்கிய பயணிகள் விமானம்.. 61 பேர் பலி - பதறவைக்கும் வீடியோ

Published On 2024-08-10 01:32 GMT   |   Update On 2024-08-10 01:32 GMT
  • விமானம் விழுந்த வேகத்தில் வெடித்துச் சிதறியதால் அப்பகுதியே தீப் பிழம்பாக மாறியது.
  • விமானம் விபத்துக்குள்ளான பதைபதைக்க வைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது

பிரேசிலின் சாவ் பாலோ மாநிலத்திலிருந்து 61 பயணிகளுடன் புறப்பட விமானமானது நேற்று [வெள்ளிக்கிழமை] மதியம் வின்ஹெடோ நகருக்கு அருகே வந்தபோது விமானிகளின் கட்டுப்பாட்டை இழந்து பயங்கர விபத்துக்குள்ளானது. 2283 என்ற அந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்து செங்குத்தாக இறங்கி அப்பகுதியில் உள்ள வீடுகளின் மேல் விழுந்து வெடித்துச் சிதறியது.

விமானம் விழுந்த வேகத்தில் வெடித்துச் சிதறியதால் அப்பகுதியே தீப் பிழம்பாக மாறியது. விமானத்தில் பயணித்த 57 பயணிகளும் 4 பணியாளர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்து நடந்த இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படை தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டது. இந்த விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா,ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். தற்போது விபத்து குறித்து விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.

விபத்து தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோவில், விமானம் நடுவானில் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுகிறது. பின்னர் வின்ஹெடோ நகரில் உள்ள வீடுகளின் மீது தலைகீழாகக் கவிழ்ந்து விழுகிறது. இதில் சில நொடிகளில் விமானத்தின் ஒரு பெரிய பகுதியில் தீப்பிடித்து எரிகிறது. பின்னர் விமானத்திலிருந்து பெரிய கரும்புகை வானத்தை நோக்கி வெளியேறுவது பதிவாகியுள்ளது. 

Tags:    

Similar News