உலகம்

இரண்டாம் உலக போரில் பங்கேற்ற பெண்ணின் 102-வது பிறந்தநாளை கொண்டாடிய ஏர்லைன்ஸ்

Published On 2024-01-28 11:23 GMT   |   Update On 2024-01-28 11:23 GMT
  • நீர்மூழ்கி கப்பல்களை கண்டறிய பயன்படுத்தப்பட்ட கருவிகளை இயக்கியவர்.
  • ஹெலன் மேரி ஹார்வத்தை விமானத்தில் அழைத்து வந்தனர்.

இரண்டாம் உலக போரில் பங்கேற்ற பெண்ணின் 102-வது பிறந்தநாளை கொண்டாடிய ஏர்லைன்ஸ் அமெரிக்காவில் உள்ள வெர்ஜினியா பகுதியை சேர்ந்தவர் ஹெலன்மேரி ஹார்வத். இவர் 2-ம் உலக போரில் பங்கேற்றவர். தனது 21 வயதில் வெர்ஜினியாவில், உலக போர் நடைபெற்ற கால கட்டத்தில் அங்கு நீர்மூழ்கி கப்பல்களை கண்டறிய பயன்படுத்தப்பட்ட கருவிகளை இயக்கியவர்.

இந்நிலையில் அவரது 102-வது பிறந்த நாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் ஹெலனுக்கு எதிர்பாராத பரிசளிக்க அவரது மகன் முடிவு செய்தார். அவர் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவர் தனது தாயின் பிறந்தநாள் குறித்து சக ஊழியர்களிடம் தெரிவித்ததும் அந்த விமான நிறுவனம் உலக போரில் பங்கேற்ற ஹெலன்மேரி ஹார்வத்தின் 102-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்தது.

அதன்படி ஹெலன் மேரி ஹார்வத்தை விமானத்தில் அழைத்து வந்தனர். செயின்ட் லூயிசில் அவர் இறங்கியதும் ஹெலனை ஊழியர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். பின்னர் அமெரிக்க கொடிகளை அசைத்து ஹெலனின் தலையில் கிரீடம் அணிவித்தனர். மேலும் ஏராளமானோர் ஆரவாரம் செய்து ஹெலனின் பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடினர். இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Tags:    

Similar News