உலகம் (World)

இலங்கையின் 9வது அதிபராக நாளை காலை பதவியேற்கும் அனுர குமார திசநாயக

Published On 2024-09-22 15:01 GMT   |   Update On 2024-09-22 15:01 GMT
  • அனுர குமார திசநாயகவிற்கு பல தோல்விகளுக்கு பிறகு ஜே.வி.பிக்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது.
  • ஒன்றிணைந்து இலங்கை வரலாற்றை மீண்டும் எழுத தயாராக நிற்கிறோம்.

இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுர குமார திசநாயக வெற்றி பெற்றுள்ளார்.

இதன்மூலம், இலங்கையின் 9வது அதிபராக நாளை காலை 9 மணிக்கு அனுர குமார திசநாயக பதவியேற்கிறார். அனுர குமார திசநாயகவிற்கு பல தோல்விகளுக்கு பிறகு ஜே.வி.பிக்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது.

கொழும்பு, அம்பாந்தோட்டை, கம்பஹா உள்ளிட்ட 158 மாவட்டங்களில் அனுர குமார திசநாயக முதலிடம் பிடித்துள்ளார்.

அதிபர் தேர்தல் வெற்றியை தொடர்ந்து, " நாம் ஒன்றாக இணைந்து எதிர்காலத்தை வடிவமைப்போம்" என்று அனுர குமார திசநாயக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், " சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் அனைத்து இலங்கையர்களின் ஒற்றுமையே இந்த புதிய தொடக்கத்தின் அடித்தளமாகும்.

நாம் தேடும் புதிய மறுமலர்ச்சி இந்த பகிரப்பட்ட வலிமை மற்றும் பார்வையிலிருந்து எழும். ஒன்றிணைந்து இலங்கை வரலாற்றை மீண்டும் எழுத தயாராக நிற்கிறோம்" என்றார்.

Tags:    

Similar News