உலகம்

அசாதுஸ்மான் கான்    பேரணியில் பங்கேற்ற பெண்கள் 

மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை- வங்காளதேச உள்துறை அமைச்சர் உறுதி

Published On 2022-07-23 22:42 GMT   |   Update On 2022-07-24 01:28 GMT
  • இந்து சமூகத்தினர் மீதான தாக்குதலைக் கண்டித்து பேரணி நடைபெற்றது.
  • நரைல் மாவட்டத்தில் இந்துக்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்திய 7 பேர் கைது.

டாக்கா:

இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் இந்து சமூகத்தினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. முகநூல் பதிவு தொடர்பாக நரைல் மாவட்டத்தில் உள்ள ஷஹாபரா பகுதியில் இந்துக்களின் இரண்டு வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது போன்ற தொடர் தாக்குதல்களை கண்டித்து பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், டாக்காவில் செய்தியாளர்களிடம் பேசிய வங்காளதேச உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கான், நாட்டில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். அராஜகம் மூலம் மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பவர்களுக்கு தண்டனை பெற்று தருவதில் அரசு உறுதியாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் மதம் குறித்து அவதூறு கருத்துக்களை கட்டுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்துள்ளது என்றும் அவர் கூறினார். இந்துக்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Tags:    

Similar News