உலகம்

உக்ரைனின் வெற்றிகரமான எதிர்தாக்குதல் புதினை பேச்சுவார்த்தைக்கு தள்ளும்: அமெரிக்கா

Published On 2023-06-13 01:17 GMT   |   Update On 2023-06-13 01:17 GMT
  • உக்ரைன் பல முனைகளில் இருந்து தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது
  • உக்ரைன் ஏழு கிராமங்களை ரஷியாவிடம் இருந்து மீட்டுள்ளது

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருவது 475 நாட்களை தாண்டியுள்ளது. கெர்சன், டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் பெரும்பாலான இடங்களை ரஷியா கைவசப்படுத்தியது. ஆனால் மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதம் வழங்கி வருவதால் உக்ரைன் பதிலடி கொடுத்து வந்தது.

தற்போது, இழந்த இடங்களை மீண்டும் மீட்பதற்காக உக்ரைன் அதிரடி எதிர்தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கு வெற்றியும் கிடைத்துள்ளது. இன்று காலை நிலவரப்படி ஏழு கிராமங்களை மீட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

எதிர்தாக்குதலில் இது குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் என உக்ரைன் நம்புகிறது. சில இடங்களில் அனைத்து திசையிலும் இருநது உக்ரைன் பதிலடி கொடுப்பதால் ரஷிய வீரர்களால் அதை எதிர்கொள்ள முடியவில்லை. இதனால் பின் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிளிங்கன் கூறுகையில் ''உக்ரைனின் வெற்றிகரமான பதிலடி தாக்குதல் ரஷிய அதிபர் புதினை போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைக்கு தள்ளும்'' எனத் தெரிவித்துள்ளா்.

நேற்று பிளிங்கன் இத்தாலி வெளியுறவுத்துறை அமைச்சர் அன்டோனியா தஜானியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்த கருத்தை குறிப்பிட்டார்.

Tags:    

Similar News