உலகம்

இந்துக்களை புறக்கணித்த கமலா ஹாரிஸ், ஜோ பைடன்: டொனால்டு டிரம்ப் குற்றச்சாட்டு

Published On 2024-11-01 05:46 GMT   |   Update On 2024-11-01 05:46 GMT
  • உலகம் முழுவதும் மற்றும் அமெரிக்காவில் உள்ள இந்துக்களை கமலா ஹாரிஸ் மற்றும் ஜோ பைடன் ஆகியோர் புறக்கணித்துள்ளனர்.
  • இஸ்ரேல் முதல் உக்ரைன் வரையிலான நமது சொந்த தெற்கு எல்லையை சீரழித்து விட்டனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில தினங்கள்தான் உள்ளன. குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்டு டிரம்ப் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தனது ஆதரவாளர்கள் இடையிலான பிரசார நிகழ்ச்சியில் ஜனநாயக கட்சி வேட்பாளரான கமலா ஹாரிஸை கடுமையாக தாக்கு பேசி வருகிறார்.

இந்த நிலையில் தனது தீபாவளி மேசேஜ்-ல் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் இந்துக்களை புறக்கணித்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள தகவலில் "உலகம் முழுவதும் மற்றும் அமெரிக்காவில் உள்ள இந்துக்களை கமலா ஹாரிஸ் மற்றும் ஜோ பைடன் ஆகியோர் புறக்கணித்துள்ளனர். அவர்கள் இஸ்ரேல் முதல் உக்ரைன் வரையிலான நமது சொந்த தெற்கு எல்லையை சீரழித்து விட்டனர். இருந்தபோதிலும் நாம் அமெரிக்காவை மீண்டும் வலிமையானதாக ஆக்குவோம். வலிமை மூலம் அமைதியை மீண்டும் கொண்டு வருவோம்.

வங்கதேசத்தில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் மற்ற சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெற்றுகாட்டுமிராண்டித் தனமாக வன்முறைக்கு எனது கடுமையான கண்டத்தை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய அதிகாரித்திற்கு கீழ் இப்படி ஒரு நம்பவம் நடைபெற்று இருந்திருக்காது" எனத் தெரிவித்துள்ளார்.

வங்கதேச வன்முறை தொடர்பாக முதன்முறையாக டொனால்டு டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News