2 உடன் 34 இலக்க பூஜ்யம் தொகையை கூகுள் நிறுவனத்திற்கு அபராதமாக விதித்த ரஷியா
- இது அமெரிக்க டாலரில் 20 டெசில்லியன் எனக் கூறப்படுகிறது.
- உலகளாவிய தடையை யூடியூப் 2022 மார்ச் மாதம் அறிவித்ததில் இருந்து இந்த இந்த சிக்கல் உள்ளது.
உக்ரைன் மீதான ரஷியாவின் ஆக்கிரமிப்பிற்கு பதிலளிக்கும் விதமாக ரஷிய அரசு நடத்தும் ஊடக சேனல்களை யூடியூப் பிளாக் செய்தது. இதற்காக யூடியூப் சேனலுக்கு எதிராக கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்திற்குச் முன்னெப்போதும் இல்லாத அபராததத்தை ரஷியா விதித்துள்ளது. இந்த அபராத தொகையானது முழு உலகப் பொருளாதாரத்தையும் பல மடங்கு விஞ்சும்.
2 என்ற எண்ணிற்குப் பிறகு 34 இலக்க பூஜ்ஜியத்தை கொண்டுள்ளது. இது அமெரிக்க டாலரில் 20 டெசில்லியன் எனக் கூறப்படுகிறது.
யூடியூப்பில் ரஷிய அரசின் ஆதரவு ஊடகங்களில் இருந்து சேனல்களைத் தடுப்பதன் மூலம் கூகுள் தேசிய ஒளிபரப்பு விதிகளை மீறியதாக ரஷிய நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து இந்த அபராதம் விதிக்கப்பட்டது. ஒன்பது மாத காலத்திற்குள் இந்த உத்தரவிற்கு இணங்க மறுத்தால் அபராத தொகை ஒவ்வொரு நாளுக்கும் இரட்டிப்பாகும் எனத் தெரிவிக்கப்படடுள்ளது.
RT மற்றும் ஸ்புட்னிக் உட்பட பல ரஷிய அரசால் இயக்கப்படும் சேனல்களுக்கு உலகளாவிய தடையை யூடியூப் 2022 மார்ச் மாதம் அறிவித்ததில் இருந்து இந்த இந்த சிக்கல் உள்ளது.