கனடா இந்து கோவில் தாக்குதல்: இந்தியாவால் தடை செய்யப்பட்ட காலிஸ்தான் இயக்க ஒருங்கிணைப்பாளர் கைது
- காலிஸ்தான் கொடியுடன் அவர்கள் பக்தர்களைத் தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியானது.
- இந்திய தேசியக் கொடி மீது நின்றபடி கையில் காலிஸ்தான் கொடியுடன் இந்திரஜித் நிற்கிறார்
கனடாவின் பிராம்டன் நகரில் அமைந்துள்ள ஹிந்து மகாசபை கோவிலுக்கு வந்த பக்தர்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. பிராம்டனில் உள்ள ஹிந்து மகா சபை கோவிலுக்கு வந்த பக்தர்கள் மீது அங்கு கூடிய காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் குச்சியால் தாக்னர். காலிஸ்தான் கொடியுடன் அவர்கள் பக்தர்களைத் தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியானது.
இந்த சம்பத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ தெரிவித்தார். மேலும் இந்த சம்பத்தை விசாரித்து வந்த பீல் பகுதி போலீஸார் 5-வது நபரைக் கைது செய்திருந்தனர்.
கனடாவில் செயல்பட்டு வந்த காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கமான எஸ்எஃப்ஜெ [சீக் ஃபார் ஜஸ்டீஸ்] இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாகத் தெரிகிறது. கைது செய்யப்பட்டவர்களில் இந்தர்ஜித் கோசல் என்று நபர் எஸ்எஃப்ஜெ இயக்க ஒருங்கிணைப்பாளர் என்று தெரியவந்துள்ளது.
முன்னதாக மேடையின் படிகளில் விரிக்கப்பட்டிருக்கும் இந்திய தேசியக் கொடி மீது நின்றபடி கையில் காலிஸ்தான் கொடியுடன் இந்திரஜித் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது.