உலகம்

புதுவிதமான சேர்க்கை கடிதத்தை அனுப்பிய சீன பல்கலை: மாணவர்களின் அதிரடி செயல்

Published On 2024-08-24 16:09 GMT   |   Update On 2024-08-24 16:09 GMT
  • மாணவர்கள் இந்தக் கடிதங்களை சோதனைப் பொருளாகப் பயன்படுத்துகின்றனர்.
  • சேர்க்கை கடிதத்தை பழங்கள் மற்றும் இறைச்சியை வெட்டுவதற்கு பயன்படுத்துகின்றனர்.

பீஜிங்:

சீனாவின் பீஜிங் நகரில் பீஜிங் வேதியியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் சேருவதற்காக மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர்.

இந்நிலையில், விண்ணப்பதாரர்களுக்கு 0.2 மில்லிமீட்டர் தடிமன் கொண்ட மிக மெல்லிய கார்பன் இழை கொண்டு அச்சிடப்பட்ட சேர்க்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

முதலாம் ஆண்டு மாணவர்கள் இந்தக் கடிதங்களை நினைவுப் பொருளாக வைப்பதற்குப் பதில், அவற்றை சோதனைப் பொருளாகப் பயன்படுத்துகின்றனர். சேர்க்கை கடிதத்தை பழங்கள் மற்றும் இறைச்சியை வெட்டுவதற்கு பயன்படுத்துகின்றனர்.

இதையடுத்து, மாணவர்கள் கடிதங்களைப் பரிசோதிப்பதை நிறுத்தும்படியும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் நவீன சாதனைகளை பிரதிபலிக்கும் தனித்துவமான கலைப்பொருளாக பாதுகாக்க வேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகம் வலியுறுத்தியது.

தங்கள் ஆய்வகங்களில் உருவாக்கப்படும் பொருட்கள் எவ்வளவு நீடித்த மற்றும் நம்பகமானவை என்பதைக் காட்ட விரும்பவே இந்தக் கடிதங்கள் அனுப்பப்பட்டது என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News