உலகம்

தாக்குதல் நடைபெற்ற பகுதி

கொலம்பியாவில் வெடிகுண்டு தாக்குதல்- 8 காவல்துறை அதிகாரிகள் பலி

Published On 2022-09-03 01:10 GMT   |   Update On 2022-09-03 01:21 GMT
  • ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
  • தேசிய விடுதலை ராணுவ அமைப்பு தாக்குதலை நடத்தியிருக்கலாம் என தகவல்

கொலம்பியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாகவும், இதில் எட்டு காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்ததாகவும், அந்நாட்டு அதிபர் குஸ்டாவோ பெட்ரோ தெரிவித்துள்ளார். இது போன்ற கொடூர தாக்குதல்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகள் மீதான இந்த தாக்குதல் வெடிமருந்துகள் மற்றும் துப்பாக்கி மூலம் நடத்தப்பட்டது போல் தெரிவதாக பிராந்திய காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பெட்ரோ கடந்த மாத தொடக்கத்தில் கொலம்பியாவின் அதிபராக பதவியேற்ற பின்னர் பொது பாதுகாப்பு பணியாளர்கள் மீது நடத்தப்பட்ட மிக முக்கியமான தாக்குதலாக இது கருதப்படுகிறது. கொலம்பியாவில் செயல்படும் கிளர்ச்சி அமைப்பான தேசிய விடுதலை ராணுவம் அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என கருதப்படுகிறது.

கொலம்பியாவின் புரட்சிகர ஆயுதப் படையினர் ஆயுதங்களைக் கீழே போட்டு 2016 இல் அரசுடன் சமாதான உடன்படிக்கைக்கு மேற்கொண்டனர். மேலும் பல கிளர்ச்சிக் குழுக்கள் போர் நிறுத்தத்தில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் அமைதிக்கு எதிரான நாசவேலை என்று அதிபர் பெட்ரோ கூறியுள்ளார்.

Tags:    

Similar News